தோல்வி பொறிக்குள் இருந்து மீளுமா CSK?
IPL தொடரில் இன்று (11) நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் Chennai Super Kings மற்றும் Delhi Capitals ஆகிய அணிகள் மோதுகின்றன.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.
ஐ.பி.எல். தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறை பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி நடப்பு தொடரில் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது இரு ஆட்டங்களில் லக்னோ, மும்பை அணிகளை தலா 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
கடைசியாக டெல்லி அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்திருந்தது. இதில் இருந்து மீண்டு வெற்றி பெறுதவற்கான முயற்சியை டெல்லி அணி எடுக்கக்கூடும்.





