வெற்றிக் கனியை ருசித்தது மேற்கிந்திய தீவுகள் அணி!
இத்தாலி Italy அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் West Indies அணி 42 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
ICC T-20 உலகக் கிண்ண தொடரின் இன்றைய ஆட்டத்தில் C பிரிவில் இடம் பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் மற்றும் இத்தாலி அணிகள் மோதின.
இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இத்தாலி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதற்கமைய துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.
பின்னர் 166 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி, 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.




