Site icon Tamil News

இலங்கையின் அணிசேரா கொள்கையை நாம் மதிக்கிறோம் – ரஷ்யா!

இலங்கை அரசாங்கம் தற்போது பின்பற்றுகின்ற அணிசேரா கொள்கையை நாம் மதிப்பதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவான் எஸ்.டகர்யான் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலக யுத்தத்தின்போது உயிர் நீத்த ரஷ்ய இராணுவத்தினரை நினைவுகூரும் வகையில் கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தினால் தேசிய பொது நூலகத்துக்கருகில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கருகில்  நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதி்ல் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர்,  இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஏற்படுத்தப்பட்ட அழிவுகளை எதிர்கொண்டு உயிர் நீத்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் நிகழ்வு உலகளாவிய ரீதியில் 11 நாடுகளில் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த 11 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குகிறது.

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அதற்கு ரஷ்ய அரசாங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். அதே போன்று இலங்கை அரசாங்கம் தற்போது பின்பற்றுகின்ற அணிசேரா கொள்கையை நாம் மதிக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version