கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் விநியோகம் தடை!
அம்பத்தலேயில் இருந்து தெஹிவளை வரையிலான பிரதான குழாய்வழியில் இன்று (18) திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கும் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) அறிவித்துள்ளது.
அதன்படி, மொரட்டுவ, ராவதவத்த, சொய்சாபுர, ரத்மலானை, தெஹிவளை, கல்கிஸ்ஸ, வெள்ளவத்தை, பாமன்கடை, முல்லேரியா மற்றும் கொலன்னாவ ஆகிய இடங்களில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
இதேநேரம், பத்தரமுல்லையில் வசிக்கும் மக்களுக்கு நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்தில் இருக்கும் என்று நீர் வழங்கல் வாரியம் தெரிவித்துள்ளது.




