இலங்கை செய்தி

சமூக வலைத்தளங்களில் பரவும் நிலக்கரி நிறுவன தலைவரின் குரல் பதிவு திரிபுபடுத்தப்பட்டது

லங்கா நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிலக்கரி விநியோக நிறுவனத்தின் உள்ளூர் முகவர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் அடங்கிய குரல் பதிவு, தவறான அர்த்தத்தில் திரிபுபடுத்தப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுவதாக அந்நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அந்த தொலைபேசி உரையாடல் கடந்த 2026 மார்ச் 25 அன்று இடம்பெற்றுள்ளது.

அவசர நிலக்கரி விநியோகத்திற்காக அமைச்சரவை அங்கீகாரத்துடன் முறையாக விலைமனு கோரல் வழங்கப்பட்ட நிறுவனத்தின் பிரதிநிதியுடனேயே இந்த உரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கியினால் வழங்கப்பட வேண்டிய ‘செயல்திறன் பிணைப்பு’ ஆவணத்தை, வங்கி வழங்கிய திகதியிலேயே சமர்ப்பிக்குமாறு கோருவதற்காகவே இந்த அழைப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் .
இது ஒரு சாதாரண நிர்வாக நடைமுறை என அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

நிலக்கரி விநியோகத்தில் எவ்வித முறைகேடுகளும் இடம்பெறவில்லை எனவும், ஒரு தரப்பினர் திட்டமிட்ட அடிப்படையில் இந்த குரல் பதிவை திரிபுபடுத்தி, தவறான உள்நோக்கத்துடன் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதாகவும் நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.
தேசிய மின்சாரத் தேவையை உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நிலக்கரி விநியோகச் செயல்பாடுகள் அனைத்தும் சட்டப்பூர்வமானவை மற்றும் வெளிப்படையானவை என லங்கா நிலக்கரி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

இவ்வாறான போலிப் பிரசாரங்கள் மூலம் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!