இலங்கை

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் விஜயகலா மகேஸ்வரன்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று (ஜூன் 29) வீதி விபத்தொன்றில் சிக்கிய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை புத்தளம் முந்தலம பிரதேசத்தில் வைத்தே அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இதனையடுத்து படுகாயமடைந்த விஜயகலா மகேஷ்வரன் சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்தார்.

விபத்துக்கான காரணங்கள், வெளியாகாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!