02 கோடி பெறுமதியான மோட்டார் சைக்கிள்களுடன் முற்றுகையிடப்பட்ட வாகன பழுதுபார்க்கும் நிலையம்
இலங்கையில் பதிவு செய்ய முடியாத, சுமார் 02 கோடி ரூபா பெறுமதியான 05 அதிவேக மோட்டார் சைக்கிள்களை பிலியந்தலை பகுதியில் ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த வாகனம், பழுதுபார்க்கும் நிலையத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கமைய, பிலியந்தலை கிளை வீதியில் உள்ள இந்த வாகனம் பழுதுபார்க்கும் நிலையம் நேற்று முற்றுகையிடப்பட்டது.
இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களொன்று சுமார் 65 இலட்சம் ரூபா பெறுமதியானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நால்வர் மோட்டார் சைக்கிள்களின் பாகங்களை தன்னிடம் கொடுத்ததாக குறித்த உரிமையாளர் தான் அவற்றை ஒருங்கிணைக்கும் பணியை மாத்திரமே செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சம்பலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





