ட்ரம்பின் உத்தரவுக்காக காத்திருக்கும் அமெரிக்க துருப்புகள் : ஈரானில் அடுத்து நடக்கப்போவது என்ன?
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தாக்குதல் நடத்த உத்தரவிட்டால், ஈரானுக்கு எதிராக தொடர்ச்சியான தாக்குதலுக்கு துருப்புகள் தயாராகி வருவதாக இரண்டு அமெரிக்க அதிகாரிகள் ரொய்டர்ஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர்.
புதிய மோதலொன்று வெடித்தால் முன்பு காணப்பட்ட மோதல்களை விட கடுமையானதாக இருக்கக்கூடும் என உயர்மட்ட தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்க தூதர்கள் ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) மற்றும் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) ஆகியோர் ஈரான் அதிகாரிகளை வரும் செவ்வாய்க்கிழமை ஜெனீவாவில் சந்திக்கவுள்ள நிலையில் இந்த தகவல் வந்துள்ளது.
தெஹ்ரானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதே ட்ரம்பின் விருப்பம் என்றாலும், “அதைச் செய்வது மிகவும் கடினமாக உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே மத்திய கிழக்கிற்கு கூடுதல் போர்கப்பல்கள், மற்றும் விமானந்தாங்கி கப்பல்களை அனுப்பவுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





