ஈரானில் 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட இலக்குகள் தாக்கி அழிப்பு!
ஈரானில் 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட இலக்குகள் வெற்றிகரமாக தாக்கி அழிக்கப்பட்டுள்ளன என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆபரேஷன் எபிக் பியூரி operation epic fury ராணுவ நடவடிக்கை தொடர்பில் அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) வெளியிட்டுள்ள தரவு பட்டியலில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி ராணுவ நடவடிக்கையில் ஈரானுக்குரிய 155-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் சிதைக்கப்பட்டோ அல்லது முழுமையாக அழிக்கப்பட்டோ உள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா தனது அதிநவீன F-35 போர் விமானங்கள், B-52 குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் அணுசக்தியால் இயங்கும் விமானம் தாங்கி கப்பல்களை போரில் பயன்படுத்தியுள்ளது.
ஈரானின் இராணுவ வலிமையை முடக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்தத் தீவிரமான வான்வழி மற்றும் கடல்வழித் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.





