உலகம் செய்தி

ஈரான் பல்கலைக்கழகம்மீது தாக்குதல்: அமெரிக்க எம்.பி. கண்டனம்!

ஈரான் ஷெரீப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மீது Sharif University நடத்தப்பட்ட தாக்குதலை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் Yassamin Ansari வன்மையாகக் கண்டித்துள்ளார்.

உலகத்தரம் வாய்ந்த பொறியாளர்களை உருவாக்கும் மேற்படி கல்வி நிறுவனம் தாக்குதலுக்கு இலக்காகியமை தொடர்பில் தனது சமூக ஊடகம் வாயிலாக அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு தாக்குதலிலேயே பல்கலைக்கழகம் சேதமடைந்துள்ளதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மசூதி சேதமடைந்துள்ளதை உறுதிப்படுத்தும் புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளன.

பத்து மில்லியன் மக்கள் வாழும் ஒரு நகரில் கல்வி நிறுவனத்தை இலக்கு வைப்பது தேவையற்றது எனவும் அமெரிக்க நாடாளுமன்ற Yassamin Ansari தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!