உலகம் செய்தி

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை -3,500 வீரர்கள் ஈரான் முன் நிலைநிறுத்தம்

மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா தனது இராணுவ இருப்பை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடற்படை மற்றும் இராணுவ வீரர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விசேட படை வீரர்கள் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படைகள், ஈரான் தொடர்பான நிலைமையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு பல்வேறு இராணுவ
தேர்வுகளை வழங்கும் நோக்கில் அனுப்பப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இதில் ஹார்முஸ் நீரிணையை திறப்பது, கார்க் தீவிலிருந்து எண்ணெய் எடுப்பது மற்றும் ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பைக் கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் அடங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) உத்தியோகப்பூர்வமாக கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.

இதனிடையே, யுஎஸ்எஸ் டிரிபோலி கப்பலில் 3,500 மாலுமிகளும் மரைன் வீரர்களும் மத்திய கிழக்கை
வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!