இந்தியா

கேரள மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

“கேரள” மாநிலத்தின் பெயரை “கேரளம்” என்று மாற்றுவதற்கு  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று இதனை அறிவித்தார்.

கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என்று மாற்றுவதற்கான தீர்மானம் கடந்த 2024 ஆம் ஆண்டு  ஜூன் 24  அன்று, அவ் மாநில  சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.

இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்த முதலமைச்சர் பினராயி விஜயன் (Pinarayi Vijayan), மலையாளத்தில் இந்த மாநிலம் ‘கேரளம்’ என்று அழைக்கப்படுவதாகவும், மலையாள மொழி பேசும் சமூகங்களுக்காக ஒன்றுபட்ட கேரளாவை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தேசிய சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே வலுவாக எழுந்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவிருக்கும் கேரள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!