உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை: ஐ.நா. பாதுகாப்பு சபை வாக்கெடுப்பு ஒத்திவைப்பு!

ஹார்முஸ் நீரிணையில் Strait of Hormuz பயணிக்கும் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், பஹ்ரைன் Bahrain முன்மொழிந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் UN Security Council இன்று (03) வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், அது நாளைவரை (04) பிற்போடப்பட்டுள்ளது.

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தேவையான தற்காப்பு வழிமுறைகளை பயன்படுத்த மேற்படி பிரேரணைமூலம் முன்மொழியப்பட்டிருந்தது.

எனினும், பலவந்தமான நடவடிக்கைகளை உள்ளடக்கிய எந்தவொரு பிரேரணையையும் சீனா கடுமையாக எதிர்க்கும் என்பதால் இது நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் சீனாவுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி பிரேரணையை தோற்கடிக்க முடியும்.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!