ஹார்முஸ் நீரிணை: பிரிட்டனில் விசேட பாதுகாப்பு கூட்டம்!
பிரிட்டனில் அடுத்த வாரம் விசேட உயர்மட்ட பாதுகாப்பு கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் Strait of Hormuz கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து ஆலோசனை நடத்தும் நோக்கிலேயே இக்கூட்டம் இடம்பெறவுள்ளது என தெரியவருகின்றது.
பாதுகாப்பு தரப்பில் உள்ள பிரதானிகள், பாதுகாப்பு கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்டவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
வேளிவிவகார அமைச்சர்கள் மாநாடு இன்று நடைபெற்ற நிலையிலேயே அடுத்து பாதுகாப்பு கூட்டம் நடத்தப்படும் என பிரிட்டன் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேற்படி பாதுகாப்பு கூட்டம் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான முக்கிய நகர்வாகக் கருதப்படுகின்றது.





