பொழுதுபோக்கு

கூலி படத்தில் இணைந்த பிரபல கன்னட நடிகர்… இவர் அவர் தானே…

நடிகர் ரஜினிகாந்த் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படம் கூலி. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

முன்னதாக இந்த படத்தின் முதல்கட்ட சூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் 2வது கட்ட சூட்டிங் சென்னையில் நடந்துவருகிறது.

இந்நிலையில் கூலி படத்தில் பிரபல கன்னட நடிகர் உபேந்திரா இணைந்துள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூலி படத்தில் உபேந்திரா கேமியோ கேரக்டரில் நடித்திருந்தாலும் அவரது கேரக்டர் மிகவும் பவர்ஃபுல்லாக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் ரஜினிகாந்துடன் இணைந்து இந்த படத்திற்காக பாடல் ஒன்றிலும் நடனமாடியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன் சூட்டிங் தற்போது எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக நடிகர் விஷாலின் சத்யம் படத்தில் முக்கியமான கேரக்டரில் உபேந்திரா நடித்திருந்தார்.

அந்த படம் அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பை தமிழில் பெற்றுக் கொடுத்த நிலையிலும் அவர் கன்னடத்தில் பிஸியான நடிகர் என்பதால் அவரால் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்க முடியவில்லை.

இந்நிலையில் நீண்ட காலங்களுக்கு பிறகு தமிழ் படத்திற்காக தற்போது ரஜினிகாந்துடன் உபேந்திரா கூலி படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் -உபேந்திரா காம்பினேஷன் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கூலி படம் பான் இந்தியா படமாக உருவாகிவரும் சூழலில் மற்ற மொழி நடிகர்களை இந்தப் படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைத்து வருகிறார். முன்னதாக நடிகர் நாகார்ஜுனாவை கூலி படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்த நிலையில், அவர் இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content