ஈரானின் தாக்குதல்களுக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு செயல்பாடுகள் தீவிரம்
ஐக்கிய அரபு அமீரகம் இன்று தனது வான்பாதுகாப்புப் படைகள் 18 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியதாக தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, மொத்தமாக 47 ட்ரோன்கள் , 18 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 4 குரூஸ் ஏவுகணைகள் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் ஈரான் நாட்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் புதிய உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
மத்திய கிழக்கு மோதல் தொடங்கியதிலிருந்து, அந்த நாட்டின் வான்பாதுகாப்பு அமைப்புகள் மொத்தமாக,475 பாலிஸ்டிக் ஏவுகணைகள்,23 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 2,085 ட்ரோன்களை எதிர்கொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இத்தாக்குதல்களில் ஆயுதப்படைகளின் 2 உறுப்பினர்கள் உயிரிழந்ததுடன், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 10 பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 203 பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் சிலருக்கு காயங்களும், சிலருக்கு கடுமையான காயங்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





