லண்டனில் இரு பேருந்துகள் மோதி விபத்து – 06 பேர் காயம்!
லண்டனில் உள்ள நியூவிங்டன் காஸ்வேயில் (Newington Causeway) இன்று இரண்டு பேருந்துகள் மோதி பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 06 பேர் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த லண்டன் ஆம்புலன்ஸ் சேவை, பெருநகர காவல்துறை மற்றும் லண்டன் தீயணைப்புப் படை உள்ளிட்ட தரப்பினர் முதலுதவிகளை வழங்கியதாக கூறப்படுகிறது.
மேலும் விபத்து தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.




