வட அமெரிக்கா

டிரம்பின் வரி கொள்கைகளால் உலகளவில் காத்திருக்கும் நெருக்கடி – உலக வர்த்தக அமைப்பு தகவல்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மாறிவரும் வரிக் கொள்கைகள் மற்றும் சீனாவுடனான மோதல் காரணமாக உலகளவில் பொருட்களின் வர்த்தக அளவு இந்த ஆண்டு 0.2 % குறைய வாய்ப்புள்ளதென உலக வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.

வரிகள் இல்லாவிட்டாலும் வட அமெரிக்காவில் வர்த்தகத்தில் சரிவு இருக்கும். இந்த ஆண்டு அங்கு ஏற்றுமதி 12.6 % இறக்குமதி 9.6 % குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் உலக வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் டிரம்பின் வர்த்தகப் போர் பொருளாதார வல்லுநர்களின் கணிப்பை கணிசமாக குறைக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.

நிச்சயமற்ற தன்மையினால், பெரும்பாலான நாடுகள் மீதான தனது கடுமையான வரிகளை டிரம்ப் பின்பற்றினால், உலகளவில் பொருட்களின் வர்த்தகம் 1.5% ஆக குறையும்.

70க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சு நடத்தி தீர்வு காண வாய்ப்புள்ளது. ஆனால் டிரம்ப் தனது கடுமையான பரஸ்பர வரிகளை தொடர்ந்தால் அது மிகவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இம்மாதம் தொடக்கத்தில் பல்வேறு நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரியை அறிவித்தார். ஒரு நாட்டில் அமெரிக்க பொருட்களுக்கு எப்படி வரி விதிக்கப்படுகிறதோ,அதே அளவு வரியை அமெரிக்காவும் அந்த நாட்டின் பொருட்களுக்கு விதிக்கும் என்று தெரிவித்தார்.

ஆனால், திடீரென, வரியை 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார். அதே நேரத்தில், சீனாவுக்கான இறக்குமதி வரியை மட்டும் அதிகரிப்பதாகக் கூறினார். சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு அமெரிக்கா 245% வரி விதித்தது.

பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு 100%க்கும் அதிகமான வரி விதித்தது. இரு நாடுகளும் போட்டி போட்டு வரிகளை விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்