உலகம் செய்தி

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முடக்கி சீனாவை இலக்கு வைக்கும் ட்ரம்ப்!

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முடக்குவதன் மூலம் சீனாவுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

சீனா தனது எரிசக்தி தேவைகளுக்கு ஈரானை அதிகம் நம்பியுள்ளதால் இந்தத் தடையின் மூலம் நெருக்கடியை ஏற்படுத்தலாம் என அமெரிக்கா கருதுகின்றது.

அவ்வாறு நடந்தால் ஈரானை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு செல்லுமாறு சீனா வற்புறுத்தும் என வாஷிங்டன் கருதுகின்றது என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்ஓர் அங்கமாகவே ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் உள்ள ஈரான் துறைமுகங்களை முற்றுகையிடுவதற்காக பெரிய அளவிலான நடவடிக்கைக்கு அமெரிக்க படைகள் தயாராகிவருகின்றன.

எனினும், குறுகிய கடல் பகுதியில் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது அமெரிக்கக் கப்பல்களுக்கு ட்ரோன் தாக்குதல் மற்றும் ஏவுகணைகளால் பெரும் அச்சுறுத்தலாம் ஏற்படலாம் என போர் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது அக்கினிப்பரீட்சையாகவே அமையுமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!