உலகம் கல்வி

இரு வாரகால போர் நிறுத்தத்துக்கு ட்ரம்ப் இணக்கம்!

ஈரான்மீதான ராணுவ நடவடிக்கை இரு வாரங்களுக்கு நிறுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் தாக்கி அழிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்த பின்னணியிலேயே அவர் திடீரென தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இணங்கியுள்ளார்.

தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஈரான் தரப்பிலும் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானால் முன்னெடுக்கப்பட்ட அமைதி முயற்சியின் பிரகாரமே இதற்குரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் திறக்க வேண்டும் என்ற முக்கிய நிபந்தனையுடன், இருவாரகால போர் நிறுத்தத்துக்கு ட்ரம்ப் இணக்கம் வெளியிட்டுள்ளார்.

தங்களின் ராணுவ இலக்குகள் ஏற்கனவே எட்டப்பட்டுவிட்டதாகவும், மத்திய கிழக்கில் நீண்ட கால அமைதிக்கான ஒப்பந்தம் தயாராகி வருவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் வெள்ளிக்கிழமை முதல் நேரடி பேச்சு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மீண்டெழ முடியாத வகையில் ஈரான் அழிக்கப்படும் என ட்ரம்ப் விடுத்திருந்த எச்சரிக்கை உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தற்காலிக போர் நிறுத்தம் மனித உரிமை ஆர்வலர்களை ஓரளவு ஆறுதல் அடைய செய்துள்ளது.

Dila

About Author

You may also like

கல்வி

கல்வி அமைச்சர் வெளியிட்ட செய்தி

பாடசாலை 3ஆம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சீன நன்கொடையின் கீழ் இலங்கை பெற்றுக்கொண்ட பாடசாலை
கல்வி

வரும் திங்களன்று 1ஆம் தவணை ஆரம்பம்

2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை இன்றுடன் (24) நிறைவடைவதாகவும் 2023ஆம் ஆண்டுக்கான  முதலாம் தவணை எதிவரும் திங்கட்கிழமை (27) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
error: Content is protected !!