ஹார்முஸ் நீரிணை வெகுவிரைவில் திறக்கப்படும்: ட்ரம்பின் அறிவிப்பால் பரபரப்பு!
ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் நீரிணைப் பகுதியை Strait of Hormuz வெகு விரைவில் மீண்டும் திறக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் Donald Trump உறுதியளித்துள்ளார்.
பாகிஸ்தானில் இன்று (11) இடம்பெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஹார்முஸ் நீரிணையைத் திறக்கும் பணி சவாலானது என்றாலும், ஈரான் ஒத்துழைக்காத பட்சத்திலும் அமெரிக்கா தனித்துச் செயல்பட்டு அதனை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் கூறினார்.
சர்வதேச சந்தையில் நிலவும் எரிசக்தி நெருக்கடியைத் தீர்க்க ஹார்முஸ் நீரிணை வழியாக போக்குவரத்து பாதையை உறுதிப்படுத்த வேண்டியது மிக முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றது.





