அமெரிக்க சட்டமா அதிபர் பதவி நீக்கம்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் Donald Trump , தனது நீண்டகால ஆதரவாளரான பாம் பாண்டியை Pam Bondi சட்டமா அதிபர் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.
புதிய சட்டமா அதிபராக Todd Blanche நியமிக்கப்படவுள்ளார். இவர் பிரதி சட்டமா அதிபர் பதவியை வகித்துவந்தார்.
Jeffrey Epstein தொடர்பான கோப்புகளை கையாண்ட விதம் குறித்து Pam Bondi அண்மையில் கடுமையான விசாரணைகளை எதிர்கொண்டார்.
டிரம்ப் அவரைப் பாராட்டிப் பேசினாலும், கடந்த சில வாரங்களில் பதவியை இழந்த இரண்டாவது முக்கிய அதிகாரி இவராவார்.
இனிவரும் காலங்களில் தான் தனியார் துறையில் பணியாற்றப் போவதாகவும், அங்கிருந்தபடியே டிரம்ப் நிர்வாகத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பேன் என்றும் Pam Bondi தெரிவித்துள்ளார்.




