போரை எதிர்த்த Pope Leo XIVமீது ட்ரம்ப் விமர்சனக்கணை தொடுப்பு!
ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளியிட்ட கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தையை Pope Leo XIV, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருத்தந்தை, சர்வதேச உறவுகளில் மிகவும் பலவீனமாகச் செயல்படுகின்றார் என ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் தீவிர இடதுசாரிகளுக்கு ஆதரவானவர் எனவும் முத்திரை குத்தியுள்ளார்.
திருத்தந்தையின் கருத்துகள் தார்மீக அடிப்படையில் அமைந்திருந்தாலும், டிரம்ப் அதனைத் தனது வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானதாகவே கருதி வருகின்றார்.
திருத்தந்தை அமெரிக்கர் என்றபோதிலும், டிரம்பின் ராணுவ நடவடிக்கைகளை அவர் எதிர்த்து வருவது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.




