தென் கொரியாவில் சந்தையில் மக்கள் கூட்டத்திற்குள் மோதிய லாரி – இருவர் மரணம்
தென் கொரியாவின்(South Korea) புச்சியோன்(Bucheon) நகரில் உள்ள ஒரு வெளிப்புற சந்தையில் மக்கள் கூட்டத்திற்குள் லாரி மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 18 பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல்துறை மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் சியோலில்(Seoul) இருந்து மேற்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் புச்சியோனில் விபத்து ஏற்பட்டுள்ளது.
வாகனத்தின் ஓட்டுநர் அதிக வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மது அல்லது போதைப்பொருள் போதையில் இல்லாத ஓட்டுநர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காயமடைந்த 18 பேரில் 11 பேர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 2 times, 2 visits today)





