இலங்கை

முல்லைத்தீவில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்!

முல்லைத்தீவு -கைவேலி பகுதியில் வீதிக்கு அமைக்கப்பட்ட பாலத்திற்கு கீழ் தேங்கி நிற்கும் நீரில் குளித்த ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைவேலி பகுதியில் வீதியில் அமைக்கப்பட்ட பாலத்திற்கு கீழ் சுமார் பத்து அடி பள்ளத்தில் நீர் தேங்கி இருக்கின்றது.

குறித்த பாலத்தில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வழமையாக குளித்து வந்த நிலையில் நேற்றையதினம் (11.04.2024) குறித்த இடத்தில் குளித்த போது நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

இன்றையதினம் (12.04.2024) சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் உடலத்தை பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தேவிபுரம் அ பகுதியை சேர்ந்த முனிசாமி திருச்செல்வம் என்ற 57 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!