உலகம் செய்தி

ஈரானின் பாதுகாப்புப் படையின் உளவுத்துறை தலைவர் கொலை – உறுதிப்படுத்தியது ஈரான்

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் உளவுத்துறை தலைவர் மஜித் காதேமி இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் இன்று கொலை செய்யப்பட்டதாக
ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலதிக விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் காதேமியை இலக்குவைத்து நடந்த தாக்குதலை உறுதிப்படுத்தினார்.

“புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் பொதுமக்களைச் சுட்டுக்கொள்கின்றனர். நாங்கள் அவர்களை ஒவ்வொருவராகவே வேட்டையாடுகிறோம்” என்றும் அவர், கூறியுள்ளார்.

திங்கட்கிழமை நடைபெற்ற தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களில், மொத்தம் 25 பேர் கொலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதில் காதேமியும் ஒருவராக உள்ளார். ஈரான், இலக்குகளை நோக்கி ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளையும் பயன்படுத்தியது.

ஞாயிற்றுக்கிழமை இரவு, ஈரானின் ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலின் ஹைஃபாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்தனர்.

போர் தொடங்கியதிலிருந்து, மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் பலர் கொலை செய்யப்பட்டாலும், ஈரான் பரவலாக்கப்பட்ட கட்டளை அமைப்பின் மூலம் தாக்குதல்களை தொடர்ந்தும் ஒருங்கிணைக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!