ஈரான் தாக்கிய போர் விமானத்தில் இருந்த 2ஆவது படை அதிகாரியையும் மீட்டது அமெரிக்கா!
ஈரானால் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானத்தில் இருந்த இரண்டாவது படை அதிகாரியும் (Weapons Officer) பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கர்னல் அந்தஸ்திலான விமானப்படை அதிகாருவரே துணிச்சலான தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களை மீட்பதற்காக முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கை ராணுவ வரலாற்றின் மிக முக்கியமான வெற்றியென ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக மேற்படி விமானத்தில் இருந்த மற்றொரு வீரரும் மீட்கப்பட்ட நிலையில், ஒரே போர்க்களத்தில் இரண்டு வீரர்கள் தனித்தனியாக மீட்கப்பட்டது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகின்றது.
ஈரான் படைகளின் கடுமையான தாக்குதல்களுக்கு மத்தியிலும் பெருமளவான விமானங்களைப் பயன்படுத்தி மீட்புப் பணி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க போர் விமானத்தில் இருந்து விழுந்த அதிகாரியை ஈரான் மக்களும், அந்நாட்டு படைகளும் தேடிவந்தன. அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஈரான் அரசால் சன்மான தொகையும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





