செய்தி

மகாவலி ஆற்றில் குதித்த கைதி மாயம்..!

பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

சிறைச்சாலையின் பயிர்ச்செய்கை பிரிவில் பணிபுரியும் குறித்த நபர் மகாவலி ஆற்றில் குதித்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

காணாமல் போன 36 வயதுடைய நபர் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைக்குட்படுத்தப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன கைதியை தேடும் பணியில் கடற்படையின் நீர்மூழ்கி வீரர்கள் மகாவலி ஆற்றில் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Mithu

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!