“பாலம்மீதான தாக்குதல் எதிரணியின் வீழ்ச்சியை வெளிப்படுத்துகிறது”
“முற்றுப்பெறாத பாலங்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு சொந்தமான கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவது, ஈரானியர்களைச் சரணடையச் செய்யாது.”
இவ்வாறு ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi தெரிவித்தார்.
இப்படியான தாக்குதல்கள் நிலைகுலைந்துபோன ஒரு எதிரியின் தோல்வியையும், தார்மிக வீழ்ச்சியையும் மட்டுமே வெளிப்படுத்துகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஈரானின் மிகப்பெரிய பாலத்தை அமெரிக்கா தாக்கி அழித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஈரானை மீண்டும் கற்காலத்திற்கே கொண்டு செல்லும் வகையில் குண்டுவீசித் தாக்குவோம் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.
இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டு சில மணி நேரத்துக்குள்ளேயே ஈரானின் மிக உயரமான பாலம் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.





