அரசியல் இலங்கை செய்தி

சர்வதேச விவகாரங்களில் இலங்கைக்கு துணை நிற்கும் சீனா!

  • December 17, 2025
  • 0 Comments

பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களின்போது இலங்கையுடன் நெருக்கமாகச் செயல்படுவதற்கு தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிரந்தரக் குழுவின் உப தலைவர் வாங் டோங்மிங் (Wang Dongming) இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். கொழும்பு வந்துள்ள வாங் டோங்மிங்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (17) நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவு, மற்றும் எதிர்காலத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டிய துறைகள் தொடர்பில் இதன்போது விரிவாகக் […]

அரசியல் இலங்கை செய்தி

பொருளாதார மீட்சிக்கு முழு ஆதரவு: அநுரவிடம் சீன தூதுக்குழு உறுதி!

  • December 17, 2025
  • 0 Comments

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு சீன அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன தேசிய மக்கள் காங்கிரஸ்ன் உப தலைவர் வாங் டோங்மிங் உள்ளிட்ட சீனத் தூதுக்குழுவின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இன்று பேச்சு நடத்தினர். ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே மேற்படி உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. “டித்வா சூறாவளியால் ஏற்பட்டுள்ள சவால்களைத் தோற்கடித்து இலங்கை மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். ஜனாதிபதி […]

அரசியல் இலங்கை செய்தி

அவசரகால சட்டம் “அரசியல் ஆயுதமா”?

  • December 17, 2025
  • 0 Comments

அவசரகால சட்டம் அடக்குமுறைக்காக பயன்படுத்தப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அவசரகால சட்டம் அமுலாகும் விதம் தொடர்பில் எதிரணிகளால் முன்வைக்கப்பட்டுவரும் விமர்சனங்கள் தொடர்பில் அமைச்சரிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். “ பேரிடர் காலகட்டத்தில் அவசர கால சட்டத்தை அமுல்படுத்துவதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை. பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்லா விதங்களிலும் உதவும் வகையிலேயே மேற்படி சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அச்சட்டம் எந்த சந்தர்ப்பத்திலும் அடக்குமுறைக்காக பயன்படுத்தப்படவில்லை. அரசியல் நோக்கங்களுக்காக கையாளப்படவும் இல்லை. […]

செய்தி

உலக வங்கியின் மதிப்பீட்டு அறிக்கை வெளியான பின்பு சர்வதேச கொடையாளர் மாநாடு!

  • December 15, 2025
  • 0 Comments

சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துவருகின்றதென அறியமுடிகின்றது. பேரிடர் மீள்கட்டுமானப் பணிகள் மற்றும் மீண்டெழுதல் உள்ளிட்ட விடயங்களுக்காகவே இம்மாநாடு நடத்தப்படவுள்ளது. பேரிடரால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் அவற்றை மீளமைக்க ஏற்படும் செலவுகள் தொடர்பான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. உலக வங்கி இதற்குரிய ஏற்பாட்டை செய்துவரும் நிலையில், அது தொடர்பான ஆரம்பக்கட்ட அறிக்கையில் விரைவில் வெளியிடவுள்ளது. இந்த மதிப்பீடுகள் நிறைவடைந்த பின்னர், சர்வதேச நாடுகள் பங்கேற்கும் கொடையாளர் மாநாடு நடத்தப்படும் என தெரியவருகின்றது. சர்வதேச கொடையாளர் மாநாட்டை […]

இலங்கை செய்தி

இலங்கை மீண்டெழ சீனாவின் உதவியும் தொடர்கிறது!

  • December 13, 2025
  • 0 Comments

பேரிடரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீதிகள், பாலங்கள், தொடருந்து உள்ளிட்ட, உள்கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சீனா உதவும் என நம்பப்படுகின்றது. வெளிநாட்டு நாடுகளுடனான சீன மக்கள்நட்புறவு சங்கத்தின் தலைவர் யாங் வான்மிங் தலைமையிலான பிரதிநிதிகள் குழு, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை கொழும்பில் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியது. இதன்போது, பொருளாதார மற்றும் கலாச்சாரத் துறைகளில் தொடர்ந்து ஆதரவளிப்பதாக யாங் வான்மிங் உறுதியளித்தார். இலங்கை உடனான சீனாவின் நீண்டகால நட்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன், அண்மைய பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட […]

அரசியல் இலங்கை செய்தி

18 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வு: வெளியானது அறிவிப்பு!

  • December 13, 2025
  • 0 Comments

விசேட நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பிரதமரின் கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 16 இன் பிரகாரமே விசேட அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இந்த விசேட அமர்வானது சபாநாயகரால் 2025.12.12 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட 2466/33ஆம் இலக்க விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 18 ஆம் திகதி 9.30 மணிக்கு கூடவிருப்பதுடன், இதில் கலந்துகொள்ளுமாறு அனைத்து எம்.பிக்களுக்கும் சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குரிய நிதியை […]

இலங்கை செய்தி

16 ஆயிரம் கால்நடை பண்ணைகள் சேதம்!

  • December 10, 2025
  • 0 Comments

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் 16 ஆயிரம் கால்நடை பண்ணைகள் சேதமடைந்துள்ளன என்று கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இவற்றுள் கோழி பண்ணைகளே அதிகம் உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு சேதமடைந்துள்ள பண்ணைகளுக்கு தலா இரண்டு லட்சம் ரூபா வீதம் இழப்பீடு வழங்கப்படவுள்ளது. அதேவேளை, பெருமளவான கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.

இலங்கை செய்தி

இலங்கையை புரட்டிபோட்ட தித்வா புயல்: 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதம்!

  • December 10, 2025
  • 0 Comments

டித்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 639 ஆக அதிகரித்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 203 பேர் காணாமல்போயுள்ளனர். 5 ஆயிரத்து 350 வீடுகள் முழமையாகவும், 86 ஆயிரத்து 882 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 27 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளன. மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த […]

error: Content is protected !!