இலங்கை

ஆழ்கடலில் சிக்கிய படகில் 300 கிலோ ஹெரோயின்!

  • April 1, 2026
  • 0 Comments

பேருவளைக்கு அப்பால் ஆழ்கடல் பகுதியில் பலநாள் மீன்பிடிப் படகிலிருந்த 300 கிலோகிராமுக்கும் அதிக ஹெரோயின் போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் இன்று (01) காலை மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் இப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறித்த படகானது திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன்,  சோதனைகளின் போது படகிலிருந்த 298 உரப் பைகளில் இப் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. மேலும்,  அதிலிருந்த 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இப் போதைப்பொருளானது, சுமார் 6000 மில்லியன் ரூபா பெறுமதி […]

இலங்கை

8,300 மாணவர்களுக்கு 3 ‘A’ சித்திகள்!

  • April 1, 2026
  • 0 Comments

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 8,300 பரீட்சாத்திகள் 3 ‘A’ சித்தியை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். அதன்படி, இவர்களில் 7,477 பாடசாலை பரீட்சாத்திகளும், 823 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் அடங்குகின்றனர். இதேவேளை, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (31) நள்ளிரவு உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

இன்று முதல் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிப்பு

  • April 1, 2026
  • 0 Comments

இன்று முதல் நாட்டில் மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி,  30 அலகுகளுக்கு கீழ்: 4.3% அதிகரிக்கப்பட்டு, ஒரு அலகுக்கான கட்டணம் 15 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30 – 60 அலகுகள்: 6.9% அதிகரிக்கப்பட்டு, ஒரு அலகு 45 ரூபாயாக வசூலிக்கப்படும். 61 – 90 அலகுகள்: 6.9% அதிகரிக்கப்பட்டு, ஒரு அலகு 120 ரூபாயாக உயர்ந்துள்ளது. 91 – 180 அலகுகள்: 7.2% கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், இதற்கான […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

  • March 31, 2026
  • 0 Comments

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார். அதன்படி, பொதி செய்யப்பட்ட சோறு, ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ஆகியன 30 ரூபாயால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சிற்றுண்டிகள் 10 ரூபாயாலும், தேநீர் வகைகள் 05 ரூபாயாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக  ஹர்ஷன ருக்ஷான் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை

இனி வீட்டிலிருந்தே தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள்!

  • March 31, 2026
  • 0 Comments

இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகளை பொதுமக்கள் இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்வதற்காக e-Service எனும் புதிய டிஜிட்டல் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் இனி கிராம அலுவலர் அலுவலகங்களுக்கோ அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கோ நேரில் செல்ல வேண்டிய அவசியம் இன்றி, eservices.elections.gov.lk என்ற இணையத்தளம் அல்லது வழங்கப்பட்டுள்ள QR குறியீட்டை (QR Code) ஸ்கேன் செய்வதன் மூலம் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். இந்த இணைய நுழைவாயில் ஊடாக 2026ஆம் ஆண்டிற்கான தேருநர் இடாப்பில் புதிய பதிவுகளை […]

இலங்கை

யாழ். வடமராட்சியில் கரையொதுங்கிய சடலம்

  • March 31, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – வடமராட்சி அல்வாய் வடக்கு கோயில் தோட்டத்தை சேர்ந்த சின்னத்தம்பி குலசிங்கம் என்பவரது சடலம் இன்று (31) காலை பருத்தித்துறை வியாபாரி மூலை பகுதியில் கடலில் இருந்து கரை ஒதுங்கியுள்ளது. குறித்த நபரை நேற்றிலிருந்து காணவில்லை என உறவுகள் தேடிக்கொண்டிருந்த நிலையில் இன்று காலை அவரது சடலம் கரை ஒதுங்கியுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்றிருந்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் நேற்றிலிருந்து காணாமல்போன அல்வாய் வடக்கு கோயில் தோட்டத்தை சேர்ந்த சின்னத்தம்பி குலசிங்கம் என்பவரது சடலம் என அடையாளம் காட்டப்பட்டுள்ளது. மேலதிக […]

இலங்கை

இலங்கையில் திடீரென அதிகரித்த தங்கவிலை!

  • March 30, 2026
  • 0 Comments

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்தைப் பதிவு செய்து வருகிறது. இலங்கையில்  3,000 ரூபாயால் தங்கவிலை அதிகரித்துள்ளது. அதன்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 393,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 361,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,188 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

கொழும்பில் 5 மணிநேர நீர்வெட்டு!

  • March 29, 2026
  • 0 Comments

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின்சார விநியோகம் தடைப்படுவதன் காரணமாக, இன்று (29) ஞாயிற்றுக்கிழமை பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை (5 மணித்தியாலங்கள்) இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. தெஹிவளை – கல்கிசை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள் (களுபோவில, தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை மொரட்டுவ – ராவத்தாவத்தை மற்றும் சொய்சாபுர ஆகிய பகுதிகளுக்கு […]

இலங்கை

நெத்திலி விலை இருமடங்கு உயர்வு

  • March 28, 2026
  • 0 Comments

ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தரமான நெத்திலி கருவாட்டின் விலை உயர்ந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் கணேஷ் விநாயகசுந்தரம் தெரிவித்துள்ளார். போருக்கு முன்னர் 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ நெத்திலி, தற்போது 1500 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். உற்பத்திச் செலவு மற்றும் விநியோகச் சிக்கல்களே இந்த விலை உயர்விற்குக் காரணம் என கணேஷ் விநாயகசுந்தரம் சுட்டிக்காட்டினார்.

இலங்கை

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கை வருகை

  • March 26, 2026
  • 0 Comments

ரஷ்ய கூட்டமைப்பின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (26) நாட்டை வந்தடைந்துள்ளார். இந்த விஜயத்தின் போது, அவர் இலங்கையின் எரிசக்தி துறையின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

error: Content is protected !!