இலங்கை செய்தி

மோடியின் சிறப்பு தூதுவராகவே ஜெய்சங்கர் வருகிறார்: அநுரவுடன் நாளை சந்திப்பு!

  • December 22, 2025
  • 0 Comments

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்   (22) இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவரின் இலங்கை விஜயத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை இன்று (22) வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதுவராக அவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கையின் அடிப்படையில் இவ்விஜயம் இடம்பெறுகின்றது. பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு “ ஒப்பரேஷன் சாகர் பந்து” திட்டம் ஊடாக பல்வேறு உதவிகளை […]

இலங்கை செய்தி

இலங்கை மீண்டெழ தொடர்கிறது டில்லியின் உதவி: சிறப்பு விமானமும் அனுப்பி வைப்பு!

  • December 9, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்காக இந்தியா சகல வழிகளிலும் உதவி வருகின்றது. அந்தவகையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப்பணிகளில் ஈடுபடுவதற்காக, இந்திய விமானப்படையின் எம்ஐ-17 உலங்குவானூர்தி, இன்று முற்பகல் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை வந்தடைந்தது. சாகர் பந்து நடவடிக்கைக்காக முன்னர் பயன்படுத்தப்பட்ட இரண்டு எம்ஐ-17 உலங்குவானூர்திகள் அத்தியாவசிய பராமரிப்புக்காக இந்தியாவுக்குத் திரும்பிய நிலையில், இந்த உலங்குவானூர்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. இன்று வந்த உலங்குவானுர்தியில் 14 பேர் கொண்ட இந்திய விமானப்படை குழு வந்துள்ளது. […]

error: Content is protected !!