அரசியல் இலங்கை செய்தி

தலைநகரில் ஆட்டம் காண்கிறதா என்.பி.பி. ஆட்சி?

  • December 24, 2025
  • 0 Comments

கொழும்பில் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஆளுகையின் கீழுள்ள கொழும்பு மாநகரசபையின் (Colombo Municipal Council) வரவு- செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “கொழும்பு மாநகரசபையின் (CMC) வரவு- செலவுத் திட்டம் தோல்வி அடைந்திருந்தாலும் நிர்வாக நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு எவ்வித […]

அரசியல் இலங்கை செய்தி

கொழும்பு மாநகர சபையில் என்.பி.பி.க்கு தோல்வி: அடுத்து என்ன?

  • December 23, 2025
  • 0 Comments

கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் அடுத்த முறை நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (23) நடைபெற்றது. இதன்போது கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில் கேள்விகள் எழுப்பட்டன. இவற்றுக்கு பதிலளித்த அமைச்சர் கூறியவை வருமாறு, கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் அதனை மீண்டும் முன்வைக்க […]

அரசியல் இலங்கை செய்தி

2026 ஆம் ஆண்டில் காத்திருக்கும் ஆபத்து: மொட்டு கட்சி எச்சரிக்கை!

  • December 23, 2025
  • 0 Comments

கொழும்பு மாநகரசபை ஊடாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு, மிக முக்கிய செய்தியொன்று வழங்கப்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையின்கீழுள்ள கொழும்பு மாநகரசபையின் பாதீடு நேற்று (22) தோற்கடிக்கப்பட்டது. இந்நிலையில் கொழும்பில் இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த கூறியவை வருமாறு, “ இலங்கையிலுள்ள உள்ளாட்சிசபைகளில் கொழும்பு மாநகரசபைதான் பிரதானமானது. அதில் ஏற்பட்டுள்ள பின்னடைவை அரசாங்கம் […]

அரசியல் இலங்கை செய்தி

கொழும்பில் இனி எங்கள் ஆட்சி: கூட்டு எதிரணி அறிவிப்பு

  • December 23, 2025
  • 0 Comments

“ கொழும்பு மாநகரசபையில் கூட்டு எதிரணியே இனி செல்வாக்கு செலுத்தும். நாமே கொழும்பை ஆள்வோம்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பு மாநகரசபையின் 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு நேற்று தோற்கடிக்கப்பட்டது. வாக்கெடுப்பின்போது ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் கிடைத்தன. இது தேசிய மக்கள் சக்திக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகின்றது. இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான்கூறியவை வருமாறு, “கொழும்பு மாநகரசபை […]

அரசியல் இலங்கை செய்தி

கொழும்பில் அநுர அரசுக்கு முதல் அடி: “பட்ஜட் ” தோற்கடிப்பு!

  • December 22, 2025
  • 0 Comments

கொழும்பு மாநகரசபையின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று (22) நடந்த வாக்கெடுப்பில் வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய மேலதிக மூன்று வாக்குகளால் பாதீடு தோற்கடிக்கப்பட்டது. கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் 48 ஆசனங்களை வென்ற தேசிய மக்கள் சக்தி,  சுயேச்சைக்குழு மற்றும் சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைந்திருந்தது. எனினும், அந்த ஆதரவு தற்போது இழக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகரசபையில் 117 […]

error: Content is protected !!