T20 World Cup: இன்றைய போட்டிகள் தொடர்பான விபரம்…!
ICC T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (17) மேலும் மூன்று லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
37 ஆவது லீக் ஆட்டத்தில் இத்தாலிItaly மற்றும் மேற்கிந்திய தீவுகள் West Indies அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி முற்பகல் 11.00 மணிக்கு Eden Gardens நடைபெறவுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் உட்பட 8 அணிகள் ஏற்கனவே சூப்பர் – 8 சுற்றுக்குள் சென்றுவிட்டதால் இன்றைய ஆட்டம் அடுத்த கட்டம் தொடர்பில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
38 ஆவது லீக் போட்டியில் இலங்கை Sri Lanka மற்றும் சிம்பாப்வே Zimbabwe அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தப் போட்டி Colombo (RPS) சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இவ்விரு அணிகளுமே சூப்பர் 8 சுற்றுக்குள் தகுதி பெற்றுள்ளன.
அதேவேளை, 39 ஆவது லீக் ஆட்டத்தில் Afghanistan மற்றும் Canada அணிகள் மோதவுள்ளன. இவ்விரு அணிகளும் முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளன.





