இலங்கையின் வானிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் : கனமழைக்கு வாய்ப்பு!
இலங்கையின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (20) அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், வடமேற்கு மாகாணத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இது தவிர மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக் கொள்கிறது
(Visited 1 times, 1 visits today)