இலங்கை அணி ‘அவுட்’: ரசிகர்கள் கடும் சீற்றம்!
இலங்கை Sri Lankan அணியின் தொடர் தோல்விகளால் அவ்வணியின் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.
தற்போதைய அணிமீது கடும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர்.
நேற்றைய ஆட்;ட முடிவில் மைதான வளாகத்திலும், சமூகவலைத்தளங்களிலும் கடும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர்.
இலங்கை அணியை கட்டியெழுப்ப முடியாது என முரளிதரன் வெளியிட்ட கருத்தை பலரும் ரீ போஸ்ட் செய்துவருகின்றனர்.
20 உலகக் கிண்ண தொடரில் நேற்று ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து New Zealand அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.
அடுத்து 169 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 107 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு தோல்விகளைப் பெற்ற இலங்கை அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
குரூப் 2 பிரிவில் இருந்து இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மீதமுள்ள ஒரு இடத்துக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் களத்தில் உள்ளன.





