இலங்கை : ஆளும் அரசாங்கத்தின் இரு உறுப்பினர்கள் மாயம் – பிரதேச சபை தலைவரை நியமிப்பதில் சிக்கல்!
தேசிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (27) வெலிகம பிரதேச சபையின் தலைவரை நியமிப்பதற்காக வாக்களிக்கச் சென்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக சபையை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடத்தப்பட்ட இரண்டு உறுப்பினர்களையும் மீண்டும் அழைத்து வந்தால் மட்டுமே சபை நடவடிக்கைகளைத் தொடங்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கட்சியின் 22 உறுப்பினர்கள் வெலிகம பிரதேச சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
(Visited 6 times, 1 visits today)





