இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்!
இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவையின் பிரதிநிதிகள் European External Action Service , பிரதமர் பிரதமர் கலாநிதி ஹரிணி Dr. Harini Amarasooriya அமரசூரியவை சந்தித்து பேச்சு நடத்தினர்.
பிரதமர் அலுவலகத்தில் இச்சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இலங்கையின் முக்கிய அபிவிருத்தி மற்றும் பொருளாதாரப் பங்காளியாக ஐரோப்பிய ஒன்றியம் விளங்குவதாக இதன்போது பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இருதரப்புக்கும் இடையிலான நீண்டகாலப் பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்துவத்தை பிரதமர் எடுத்துரைத்தார்.
இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
மேம்படுத்தப்பட்ட பொருளாதார ஈடுபாடு, வர்த்தகம் மற்றும் முதலீடுகளை எளிதாக்குவதற்குத் தேவையான சட்ட மற்றும் கொள்கை மறுசீரமைப்புகளை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தைப் பிரதமர் வலியுறுத்தினார்.
பொருளாதார ஸ்திரத்தன்மை, நல்லாட்சி ஆகியவற்றைப் பலப்படுத்துவதற்கும முன்னெடுக்கப்பட்டு வரும் தற்போதைய முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்துப் பிரதிநிதிகள் குழுவிற்கு விளக்கமளிக்கப்பட்டது.





