இலங்கை

இலங்கை – முதியவரை அடித்து கொலை செய்து விட்டு தலைமறைவான பிக்கு

கிரியுல்ல – கஜுலந்தவத்த மாரவில பிரதேசத்தில் வீடொன்றில் தங்கியிருந்த பிக்கு தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த வீட்டிற்குள் ஒருவர் காயமடைந்து இருப்பதாக கிரியுல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்,பொலிஸார் அவரை மீட்டு தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கொடவத்தை, மாரவில பிரதேசத்தில் வசிக்கும் 72 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சந்தேக நபரான பிக்கு உயிரிழந்தவரின் உறவினர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் விகாரை ஒன்றில் வசிக்காமல் மாரவில பிரதேசத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்ததும், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது குறித்த பிக்கு அந்த பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில், தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன், கிரியுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content