ஐரோப்பா

ஜெர்மனியில் பனிப்புயல் – ரயில், விமான சேவைகள் முடக்கம்

ஜெர்மனியின் முனிச் நகரில் தொடர்ந்து வீசிவரும் பனிப்புயல் காரணமாக, நேற்று அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தெற்கு ஜெர்மனியின் பெரும்பாலான பகுதிகளில் பனிப்புயல் வீசி வருவதால் முனிச் விமான நிலையத்தில் இன்று காலை 6 மணி வரை விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சாலைகளில் பனி தேங்கியுள்ளதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சாலை விபத்துக்களும் நிகழ்ந்துள்ளன.

முனிச் மற்றும் உல்ம் நகரங்களில் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தண்டவாளங்களில் தேங்கியுள்ள பனியால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், தொலைதூரம் செல்லும் பயணிகள் நேற்றிரவு முழுவதும் ரயிலிலேயே காத்திருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர்.

ஜெர்மனி மட்டுமன்றி அதன் அண்டை நாடுகளான ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்திலும் பனிப்புயல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக, அங்கு பனிச்சரிவு ஏற்படலாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்