15 பேருடன் விபத்துக்குள்ளான ரஷ்ய ராணுவ சரக்கு விமானம்
ரஷ்யாவின் Ilyushin Il-76 இராணுவ சரக்கு விமானம் ஒன்று 15 பேருடன் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதன் இயந்திரம் ஒன்றில் தீப்பிடித்ததால் விபத்துக்குள்ளானதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இவானோவோ பகுதியில் இந்த விபத்து நடந்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய ஆன்லைன் செய்தி சேவைகள் விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. ஆனால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை





