ஐரோப்பா

உலக நாடுகளை அச்சுறுத்தும் ரஷ்யா – போர் பதற்றத்திற்கு மத்தியில் களமிறங்கவுள்ள அரக்கன்

ரஷ்யா – உக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் கடும் பிரயத்தனம் செய்து வரும் நிலையில், அதிக திறன் கொண்ட அணுசக்தி சோதனையில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது.

அணுவாயுத திறனை மேம்படுத்துமாறு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய அணுசக்தி திறன் கொண்ட புரேவெஸ்ட்னிக் (Burevestnik) குரூஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு, உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த தனித்துவமான தயாரிப்பை விரைவில் நிலைநிறுத்த முயற்சிப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை எந்த பாதுகாப்பு அமைப்பையும் தாக்கும் திறன் கொண்டது என ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ரஷ்ய ஜனாதிபதி உயிருடன் இருக்கும் வரையில் உக்ரேனில் போர் ஓய்வுக்கான வாய்ப்பு இல்லையென போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk) தெரிவித்துள்ளார்.

அடுத்து வரும் சில வருடங்கள் ரஷ்யாவுக்கு எதிரான போரை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக உக்ரேன் ஜனாதிபதி தன்னிடம் குறிப்பிட்டுள்ளதாக, போலந்து பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ரஷ்ய – உக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலான அமைதி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தயாராக இருப்பதாக செர்பிய வெளியுறவு அமைச்சர் மார்கோ டூரிக் அறிவித்துள்ளார்.

எவ்வாறான அழுத்தங்கள் வந்தாலும் உக்ரேன் மீதான போர் நீடிக்கும் என ரஷ்ய இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். உக்ரேனின் முக்கிய பிராந்தியங்களான டொனெட்ஸ்க் மற்றும் கார்கிவ் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்