மஹிந்த வீட்டில் கொள்ளை
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வீட்டில் கொள்ள நடந்துள்ளது.
தென்மாகாண அம்பலாங்கொடை பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாகப் பொலீசார் தெரிவிக்கின்றனர்.
தென் மாகாணத்தின் அனைத்து பொலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் இக்கொள்ளைச் சம்பவம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் தனது புதல்வர் ஒருவரின் இரண்டு பெறுமதியான கைகடிகாரங்கள் காணாமல் போய் உள்ளதாகவும் ஒரு பெரிய டிவி 02 கேஸ் சிலிண்டர்கள் ஆகியனவும் இச்சம்பவத்தில் காணாமல் போய் உள்ளதாகவும் அம்பலாங்கொடை பொலீஸ் நிலையத்தில் பதிவு செய்த முறைப்பாட்டில் முன்னாள் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களுடன் நெருங்கி பழகும் ஜனரஞ்சக மனிதரான இவரது வீட்டில் இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்க ஏராளமான ஊடகவியலாளர்கள் அவரது இல்லத்துக்கு சென்றிருந்தனர்.
மிகவும் வேதனையாகவும் சுவாரஷ்யமாகவும் இச்சம்பவத்தை விவரித்த அவர் எனது வீட்டில் தங்கம் எதுவும் இல்லை எனவும் இருந்த சொற்ப நகைகளும் வங்கியில் அடகு வைத்துள்ளேன் எனவும் அவர் ஊடங்களுக்கு தெரிவித்துள்ளார்