விமானங்கள் இரத்து செய்யப்படும் அபாயம் – ஐரோப்பிய மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
இந்தக் கோடையில் 10% விமானச் சேவைகளை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் என ரயன்ஏர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எச்சரித்துள்ளார்.
ஈரான் போர் காரணமாக ஜெட் எரிபொருள் விலைகளில் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டால், இந்நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொர்பில் கருத்து வெளியிட்டுள்ள அந் நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் ஓ’லியரி (Michael O’Leary), “நாம் அனைவரும் ஒரு அறியப்படாத சூழ்நிலையை எதிர்கொள்கிறோம். மேலும், மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 5 தொடக்கம் 10 சதவீத விமானங்களை ரத்து செய்ய வேண்டியிருக்கும்.
அதிகரித்து வரும் செலவுகளைத் தவிர்ப்பதற்காக, கோடைக்கால விமானப் பயணங்களை தாமதமின்றி முன்கூட்டியே முன்பதிவு செய்யுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் பயணிக்கும் முக்கிய நீர்வழியான ஹோர்முஸ் ஜலசந்தி பெரும்பாலும் மூடப்பட்டிருப்பதால், எரிபொருள் மற்றும் எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ளதுடன், தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




