செய்தி தமிழ்நாடு

50,000 ரூபா, குறைந்த வருவாய் – உதயநிதியின் சொத்து மதிப்பு தெரியுமா?

துணை முதல்வர் உதயநிதிக்கு 20.64 கோடி ரூபாவுக்கு அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இடம் பெற்றுள்ள விவரம் – உதயநிதி தனது கையிருப்பில் ரூ.50,000, அவரது மனைவி கிருத்திகா கையிருப்பில் ரூ.75,000 இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மகள் தன்மயா வங்கிக் கணக்கில் நிரந்தர வைப்பு நிதியாக ரூ.2,56,940 இருப்புள்ளது.

அதேபோன்று, தனது பெயரில் 1 கோடி ரூபா மதிப்பிலான டிபென்டர் கார், ரூ.23 லட்சம் மதிப்புடைய இன்னோவா கார் இருப்பதாகவும், தங்கம், வெள்ளி, வைர நகைகள் ஏதுமில்லை என்றும், மனைவி கிருத்திகாவிடம் 1,600 கிராம் தங்க நகைகள் இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுமொத்தமாக, அசையும் சொத்துகளாக உதயநிதியிடம் ரூ.12.92 கோடியும், அவரது மனைவியிடம் ரூ.13.25 கோடியும், மகளிடம் ரூ.2.56 லட்சமும் உள்ளன.

இதுதவிர, உதயநிதி பெயரில் ரூ.7.72 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளன. அவரது மனைவி கிருத்திகா உதயநிதி பெயரில் அசையா சொத்துகள் இல்லை. மொத்தமாக உதயநிதி பெயரில் மட்டும் ரூ.20.64 கோடிக்கு அசையும், அசையா சொத்துகள் உள்ளன. மேலும், அவர் பெயரில் தற்போது 10 குற்றவியல் வழக்குள் நிலுவையில் இருக்கின்றன.

இதனிடையே, கடந்த 5 ஆண்டுகளில் வருமான வரி கணக்கில் காட்டப்பட்ட வருமானம் அடிப்படையில் உதயநிதியைவிட, கிருத்திகாவின் வருவாய் அதிகரித்துள்ளது. 2022-23-ம் ஆண்டில் ரூ.7.94 கோடியாக இருந்த உதயநிதியின் ஆண்டு வருமானம், 2024-25-ம் ஆண்டில், ரூ.10.40 லட்சமாக குறைந்துள்ளது.

அதேபோன்று, 2023-24-ம் ஆண்டில், ரூ.44.94 இலட்சமாக இருந்த, கிருத்திகாவின் வருமானம், 2024-25-ல் ரூ.2.92 கோடியாக உயர்ந்துள்ளது.

மேலும், 2021 ஆம் ஆண்டு தேர்தலில் உதயநிதி காட்டியதைவிட, அவரின் சொத்து மதிப்பு தற்போது குறைந்துள்ளது. 2021 இல் உதயநிதிக்கு ரூ.21.13 கோடியும், கிருத்திகாவுக்கு ரூ.1.15 கோடியும் அசையும் சொத்துகள் இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!