ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான உறவு – பீட்டர் மண்டேல்சன் கைது!
ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான உறவுகள் காரணமாக அமெரிக்காவிற்கான முன்னாள் இங்கிலாந்து தூதர் பீட்டர் மண்டேல்சன் (Peter Mandelson) நே்ற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு லண்டனில் உள்ள ஒரு முகவரியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக லண்டன் பெருநகர காவல் படை தெரிவித்துள்ளது.
தற்போது அவர் விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
சுமார் 10 வருடங்களுக்கு முன்பு எப்ஸ்டீனுக்கு முக்கியமான அரசாங்கத் தகவல்களை அனுப்பியதாகக் மண்டேல்சன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர் மீது பாலியல் தவறான நடத்தை குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்றாலும், , எப்ஸ்டீனுடனான நட்புடன் தொடர்புடைய குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




