விளையாட்டு

மும்பைக்கு முடிவு கட்டியது RCB!

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 20 ஆவது லீக் ஆட்டத்தில் Royal Challengers Bengaluru அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

Mumbai Indians ,Royal Challengers Bengaluru (RCB) அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற முப்பை இந்தியன்ஸ் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதற்கமைய துடுப்பெடுத்தாடிய RCB அணி 20 நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 240 ஓட்டங்களைப் பெற்றது.

241 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்கு, Sherfan Rutherford 71 ஓட்டங்களும், Hardik Pandya 40 ஓட்டங்களும் எடுத்து போராடினர்.

எனினும், RCB பந்துவீச்சாளர்கள் ஓட்ட வேகத்தை மிகச்சரியாகக் கட்டுப்படுத்தினர்.

இறுதி ஓவர்களில் மும்பை அதிரடி காட்ட முயன்றாலும், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 222 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இதன் மூலம் RCB  அணி 18 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்தது. அதிரடியாக விளையாடி வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்த பில் சால்ட் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!