விருது கோப்பையில் மது அருந்திய பிரபல ராப் இசைக் கலைஞரால் வெடித்த சர்ச்சை

அமெரிக்க ராப் இசைக் கலைஞரான ஜெய் இசட்டுக்கு இசைத் துறையில் தனிப்பட்ட மற்றும் தொழில் முறை சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இம்பாக்ட் விருது வழங்கப்பட்டது.
விருதை மகள் புளு ஜவியை மேடையில் அழைத்து சென்று அவர் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் விருதை பெற்ற மகிழ்ச்சியில் ஜெய் இசட் மேடையில் இருந்து கீழே வந்து தனது சக நண்பர்களுடன் விருதை கொண்டாடும் வகையில் தான் பெற்றுக் கொண்ட விருது கோப்பையில் மது ஊற்றி அருந்தினார்.
இந்நிலையில் அவர் விருது கோப்பையில் மது அருந்தும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
(Visited 16 times, 1 visits today)