இலங்கை அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் ரணில் விடுத்துள்ள கோரிக்கை
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதியமைச்சர் என்ற ரீதியில் தாம் எடுத்த சட்ட அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தாம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சம்பள அதிகரிப்பை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், சம்பள அதிகரிப்பு வழங்கப்படாவிட்டால், அதற்காக ஒதுக்கப்பட்ட பணம் எங்குள்ளது என்பதை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று (23) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 3 times, 1 visits today)