முப்பையை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறியது ராஜஸ்தான்!
மும்பை இந்தியன்ஸ் Mumbai Indians அணியை 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் Rajasthan Royals அணி வெற்றிபெற்றுள்ளது.
IPL – 2026 தொடரின் 13 ஆவது லீக் ஆட்டம் நேற்றிர நடைபெற்றது.
மழையினால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டி தலா 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தது.
11 ஓவர்கள் மட்டுமே கொண்ட ஆட்டம் என்பதால், ராஜஸ்தான் தொடக்க வீரர்கள் முதல் பந்திலிருந்தே அதிரடியில் இறங்கினர்.
இதற்கமைய ராஜஸ்தான் அணி 11 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 150 ஓட்டங்களைப் பெற்றது.
151 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்குத் தொடக்கம் முதலே நெருக்கடி ஏற்பட்டது.
ரோஹித் சர்மா (5) மற்றும் சூர்யகுமார் யாதவ் (6) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.
இறுதியில் மும்பை அணி 11 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 123 ஓட்டங்களை மட்டுமே பெ;றறு தோல்வியைத் தழுவியது.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று, 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளில் 2 தோல்விகளுடன் 7-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.




